18 தொழிலாளர்கள் காணவில்லை..!! இந்தியா-சீனா எல்லை பதற்றம்..!!

அருணாச்சல பிரதேசத்தின் குருங்குமே மாவட்டத்தில் இந்தியா-சீனா எல்லை அருகே ஒரு தொழிலாளி கொல்லப்பட்ட நிலையில் 18 பேர் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கடந்த 14 நாட்களாக காணவில்லை. அனைத்து 19 தொழிலாளர்களும் ஜூலை 5 இருந்து காணவில்லை என கூறப்பட்ட நிலையில் ஒரு தொழிலாளியின் உடல் அருகே உள்ள ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. 

குருங்குமே மாவட்டத்தின் துணை ஆணையர் பெங்கியா நிகி தொலைபேசியில் பேசுகையில் திங்கட்கிழமை டாமின் வட்டத்தின் கீழ் ஃபுராத் நதி என்ற சிறிய ஆற்றில் ஒரு தொழிலாளியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு போலீஸ் குழுவில் டாமினின் வட்ட அதிகாரியும் இன்று காலை அந்த இடத்தை நோக்கி நகர்ந்துள்ளது. தொழிலாளர்கள் டாமின் வட்டத்தின் கீழ் ஹுரி பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று பெங்கியா நிகி கூறினார்.

டாமின் வட்டம் பகுதி இந்தியா-சீனா எல்லையில் அமைந்துள்ளது. காணாமல் போன தொழிலாளர்களின் பெரும்பாலானோர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் தங்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாடி விட்டு  ஜூலை 5ஆம் தேதி அந்த இடத்தை விட்டு வெளியேறி இருக்கலாம் என்று நிகி கூறினார்.

குருங்குமே மாவட்டத்தின் துணை ஆணையர் மேலும் கூறுகையில், சாலைத் திட்டத்தின் ஒப்பந்ததாரரிடம் இருந்து காணாமல் போன தொழிலாளர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது.விசாரணை தொடங்கப்பட்ட உள்ளதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *