முகமது ஜுபைர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் – உச்சநீதிமன்றம்

பத்திரிக்கையாளர் முகமது ஜுபைருக்கு எதிராக எவ்வித துரித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.உத்தரப் பிரதேசத்தில் தனக்கெதிராக பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளை ரத்து செய்யக் கோரி அவசர மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் முகமது ஜுபைர் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இடைக்கால பாதுகாப்பு உத்தரவை பிறப்பித்தார். மேலும், அடுத்த புதன்கிழமை ஜுபைர் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் வரை, முகமது ஜுபைருக்கு எதிராக எந்தவித துரித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று உத்தரப் பிரதேச நீதிமன்றங்கள், போலீஸாரிடம் கேட்டுக் கொண்டார்.
இதற்கு முன் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ஜுபைருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இருந்தபோதிலும் இந்த ஒரு வழக்கில் மட்டுமே அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
அவர் மீது உள்ள மேலும் சில வழக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் ட்வீட் சர்ச்சை வழக்கில் ஜாமீன் கிடைத்துவிட்டாலும் சிறையிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.