வங்காளதேசத்தில் இந்து குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!!

வங்காளதேசத்தில் குடியிருப்புகள் மற்றும் கடைகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் அதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்து உள்ளது. வங்காள தேசத்தில் இந்துக்கள் வாழும் பகுதிகளில் நுழைந்த மர்ம நபர்கள் அவர்களின் குடியிருப்புகளையும், கடைகளையும் அடித்து நொறுக்கி சூறையாடி உள்ளனர்.
மதச் சார்பில்லாத நாட்டில் இவ்வாறு வன்முறைகள் நடப்பதை ஏற்க முடியாதது என்று தேசிய மனித உரிமைகள் ஆணைய கூறியிருக்கிறது. கடந்த வாரம் 18 வயதுடைய ஒரு இளைஞர் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி வெள்ளிக்கிழமை அன்று பிரார்த்தனையை முடித்துவிட்டு சிலர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சர்ச்சைக்குரிய வகையில் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. அவரை கைது செய்யக்கோரி போராட்டங்கள் நடக்கிறது. அப்போது ஆகாஷ் அவரின் வீட்டில் இல்லாததால் இந்த பிரச்சனையில் சம்பந்தமில்லாத நபர்களின் குடியிருப்பின் மேல் தீ வைத்திருக்கிறார்கள். இதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்து உள்ளது.