குப்பையில் இருந்த மோடி படம்..!! தூய்மை பணியாளர் பணி நீக்கம்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சி நடைபெறும் நிலையில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி வகித்து வருகிறார். உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க அரசை எதிர்த்து போராடுபவர்கள் மற்றும் அரசின் குறைகளை சொல்பவர்களை உத்தரபிரதேச அரசு கண்டிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. 

இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருந்த போதிலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் கஞ்சி பகுதியில் நகராட்சி தூய்மையாளர் ஒருவர் துப்புரவு பணியை செய்து வந்துள்ளார்.  

அப்போது அவர் பயன்படுத்தும் குப்பை வண்டியில் பிரதமர் மோடி மற்றும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புகைப்படங்களை ஏற்றி சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதைத் தொடர்ந்து தூய்மை பணியாளர் தனது பணியை செய்யவில்லை என்று கூறி அவரை நகராட்சி நிர்வாகம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.க அரசின் இந்த செயலை பலரும் விமர்சித்து கண்டித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.