டெல்லியில் பயங்கரம்: தந்தையை அடித்த இளைஞர் மீது  துப்பாக்கி சூடு..!!

டெல்லியில் தந்தையை அடித்த இளைஞரை ஏழு மாதங்களுக்கு பிறகு துப்பாக்கியால் சுட்டு சிறுவன் பலி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜஹாங்கிபூாில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் உள்ள பூங்காவிற்கு அருகே ஒரு நபர் அமர்ந்து கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக வந்த நான்கு சிறுவர்கள் அமர்ந்து இருந்த அருகே சென்று மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து ஜாவத் முகத்திற்கு நேராக குறிபார்த்து திடீரென ஒரு சிறுவன் சுட் உள்ளனர்.  சம்பவம் நடந்த சில நொடியில் அந்த நான்கு  சிறுவர்களும் ஓட்டம் பிடித்து ஓடினர். அந்த  நபர் அங்கேயே நிலை தடுமாறி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறையினர் விரைந்து சென்று ஜாவத்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஜாகத்தின் கண்ணில் குண்டடிப்பட்டு உள்ளது.

துப்பாக்கியால் சுட்ட சிறுவனின் தந்தையை ஏழு மாதங்களுக்கு முன்பு ஜாவத் தாக்கியுள்ளார். அதற்கு பலி வாங்க நண்பர்களுடன் சென்று ஜாவத்தை சுட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. நாட்டு துப்பாக்கியை கைப்பற்றி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.