45 துப்பாக்கிகள் பறிமுதல்..!! வியட்நாமில் சிக்கிய இந்திய தம்பதியினர்..!!

டெல்லி பன்னாட்டு விமான நிலையத்தில் 45 துப்பாக்கிளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். தங்கம், போதை பொருட்கள், ஆயுதங்கள், சிலை போன்றவை வெளிநாடுகளில் இருந்து விமான நிலையங்கள் மூலம் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.
சென்னை, திருவனந்தபுரம், மதுரை போன்ற விமான நிலையங்களில் அடிக்கடி தங்கம் கடத்தப்படும் நிகழ்வும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அண்மை காலமாக அதிகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், டெல்லி பன்னாட்டு விமான நிலையத்தில் ஆயுதப் பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வியட்நாம் நாட்டிலிருந்து வருகை தந்த இந்தியர் பிடிபட்டனர். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களை சோதனையிட்டு பார்த்ததில், இரண்டு டிராலி பைகளில் இருந்து 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் உண்மையானதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த முதற்கட்ட அறிக்கையில் விசாரித்து வருகின்றனர்.