முஹம்மது ஜுபைர் 14 நாள் நீதிமன்றக் காவல் இருக்க வேண்டும் – லக்கிம்பூர் நீதிமன்றம்  

பத்திரிகையாளர் முஹம்மது ஜுபைர் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஆல்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் முஹம்மது ஜுபைர், மத உணர்வை புண்படுத்தும் நோக்கில் ட்விட்டரில் பதிவிட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 27ம் தேதி டெல்லி போலீசாரால் முஹம்மது ஜுபைர் கைது செய்தது. 

மத உணர்வை புண்படுத்தியது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்திலும் அவருக்கு எதிராக ஒரு வழக்கு பதியப்பட்டது. லகிம்பூர் கெரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், இந்த வழக்கில் தமக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் முஹம்மது ஜுபைர் சீதாபூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவை சீதாபூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்றம் முஹம்மது சபைக்கு 5 நாட்களுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

எனினும், இந்த நிபந்தனை ஜாமீன், சீதாபூர் மாவட்ட வழக்குக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தீர்ப்பு வெளியிட்டது. இந்த நிலையில் பத்திரிகையாளர் முஹம்மது ஜுபைர் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.