ஹரியானாவில் பதற்றம்..!! இரவு நேர விடுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்..!!

ஹரியானாவில் இரவு நேர விடுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் திடீரென ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சிசிடிவி காட்சியானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தில் இரவு நேர விடுதியில் திடீரென்று நண்பர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. 

இந்த மோதலில் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அப்போது விடுதிக்கு வெளியில் 4 பெண்கள் நின்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் விடுதி பாதுகாவலர் மற்றும் அடையாளம் தெரியாத இளைஞர் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய மோஹித் என்பவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து  காவல் அதிகாரி சுக்பீர் சிங் கூறுகையில் 

3 ஆம் தேதி காலை 4.30 மணியளவில் கோகோ கஃபேக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எங்களுக்கு தகவல் நடந்தது.  விசாரித்ததில் தனது நண்பரையும் பவுன்சரையும் இந்த நபர் காயப்படுத்தினார். இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் மற்றொருவர் மீது நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம் என கூறினார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.