டெல்லியில் நடந்த கொடூரம்..!!  நாய் மற்றும் அதன் உரிமையாளரை இரும்பு கம்பியால் தாக்கிய நபர்..!!

டெல்லியில் தரம்வீர் தஹியா என்பவரை பார்த்து நாய் குறைந்ததால் ஆத்திரம் அடைந்த ரக்ஷித் நாய் மற்றும் அதன் உரிமையாளரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லியில் உள்ள பஸ்சிம் விஹார் என்ற பகுதியில் ரக்ஷித் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்று வளர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் தரம்வீர் தஹியா என்பவர் அதிகாலையில் அந்த பகுதியில் நடை பயணம் செய்துள்ளார். அப்போது ரக்ஷித் வளர்க்கும் நாய், தரம்வீர் தஹியாவை பார்த்து குறைத்துள்ளது. நாய் தன்னை நோக்கி குரைத்ததால் ஆத்திரம் அடைந்து அதை அடித்துள்ளார்.

தனது வளர்ப்பு நாயை பக்கத்து வீட்டுக்காரர் தாக்கியதை  பார்த்த ரக்ஷித் அதை தடுக்க வந்துள்ளார். இதனால் இருவரும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து ஆத்திரம் அடைந்த தரம்வீர் தஹியா, ரக்ஷித்தையும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் கம்பியால் தாக்கி உள்ளார். மேலும் இதை தடுக்க வந்த தனது மற்ற அண்டை வீட்டுக்காரர் ஒருவரையும்  தாக்கியுள்ளார்.

இந்த காட்சிகள் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி ஒன்றில் பதிவாகிய நிலையில் அது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த காட்சியில் தரம்வீர் தஹியா 3 பேரை தாக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…