அசாமில் ஏற்பட்ட நிலச்சரிவு..!! இதுவரை 126 பேர் உயிரிழப்பு..!!
அசாம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை 126 உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அசாம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஜூன் மாதம் தொடக்கம் முதலே தொடர்ந்து கனமழை பெய்தது.
இதனால் அசாமில் மொத்தம் உள்ள 35 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோபிலி மற்றும் பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல இடங்களில் ஆற்றின் கரைகள் உடைந்து விளைநிலங்களில் வெள்ள நீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கி, சுமார் பல ஹெக்டேர் விளைநிலங்கள் வீணாகி உள்ளன. இந்த கனமழையால் அசாமில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இதுவரை அசாம் மாநிலத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலம் முழுதும் மீட்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதிலும், நிவாரணப் பொருட்கள் வழங்குவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். விமானப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.