குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு..!! அழுத்தம் கொடுக்கும் குடியரசுத் துணைத் தலைவர்..!!

இந்திய குடியரசுத் தலைவர் பதவி தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 15ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில்,  இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 29 ஆம் தேதியும், ஜூலை 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், தேவைப்பட்டால், ஜூலை 21 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி அன்று முடிவடையும் நிலையில் அதற்கான தேர்தலை அறிவித்தது.

முதல்வா் பதவி முதல் குடியரசுத் தலைவா் பதவி வரை...- Dinamani

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த நிலையில் பாரதிய ஜனதா குடியரசுத் தலைவர் தேர்தலில் நிற்க துணை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும், கேரளாவின் ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் பெயர்கள் பரிசீலினை செய்து வருகின்றனர்.

அவர்களின் வெங்கய்ய நாயுடு பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் திமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளும் தங்களை ஆதரிக்க வாய்ப்புள்ளதாக வெங்கய்ய நாயுடு கூறி வருகிறார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக ஒரு மிகப்பெரிய கூட்டணியை உருவாக்குவதற்கு அடித்தளமாக இந்த குடியரசுத் தலைவர் தேர்தல் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *