அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்தடைந்தார். 

இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த மாதம் 30ஆம் தேதியன்று செனகல் கத்தார் மற்றும் கபோன் போன்ற நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். 

இந்த மூன்று நாடுகளுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு  செல்வது இதுவே முதல் முறை ஆகும். அதன்படி முதலில் கபோனுக்கு சென்று அந்நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் மற்றும் தலைவர்களுடன் பேசினார்.

INDIAN VICE-PRESIDENT LEAVES DOHA

அதனைத் தொடர்ந்து இம்மாதம் 2ம் தேதி அன்று செனகல் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் மேக்கி சால்லுவை சந்தித்து இரு நாடுகளின் உறவு குறித்து பேசியிருக்கிறார். 

அதன்பிறகு இறுதியாக கத்தார் நாட்டிற்கு சென்ற அவர் அந்நாட்டு பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியாக இருக்கும் ஷேக் காலித் பின் அப்துல் அஜிஸ் அல் தானியுடன் பேசினார். இந்நிலையில் நேற்று வெங்கையா நாயுடு அரசுமுறைப் பயணத்தை முடித்துவிட்டு தன் மனைவியோடு டெல்லி புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, செனகல் நாடுகளின் தூதரக உறவை வலுப்படுத்தும் வகையில் துணை ஜனாதிபதி பயணம் அமைந்துள்ளது என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ட்வீட் செய்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *