காவல் நிலையத்திற்கு தீவைத்தவர்களின் வீடுகள் இடிப்பு ! 

Demolition of 5 houses in Assam

போலீஸ் நிலையத்துக்கு தீ வைத்த 5 பேரின் வீடுகளை அசாம் மாநில அரசு இடித்து தகர்த்துள்ளது.

அசாம் மாநிலம் நகோவான்மாவட்ட பதட்ரவா பகுதியைச் சேர்ந்தவர் மீன் வியாபாரி சபிக்குல் இஸ்லாம் . இவர் நேற்று முன்தினம் சபிக்குல் இஸ்லாம் அப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த பதட்ரவா காவல் துறையினர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமும், வாத்தும் கேட்டதாகத் தெரிகிறது. அதற்கு அவர் தர மறுக்கவே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இஸ்லாம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்த இஸ்லாமின் குடும்பத்தார் நேற்று பிற்பகல் பதட்ரவா காவல் நிலையத்திற்கு தீவைத்து எரித்தனர். 

இந்நிலையில் அசாம் மாநில காவல்துறை  டிஜிபி பாஸ்கர் ஜோதி மகந்தா, சபிக்குல் இஸ்லாம் சாலையில் மயங்கி விழுந்திருந்ததாகவும், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் அவரது மனைவியிடம் நல்ல நிலையில் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் காவல் நிலையத்தை தீவைத்து எரித்த 5 பேரின் வீடுகளை நேற்று மாவட்ட நிர்வாக அதிகாரிகள் புல்டோசர் மூலம் இடித்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்ததால் அவற்றை இடித்ததாகத் தெரிவித்தனர். இதனிடையே காவல் நிலையத்தை எரித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *