பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயர்வு

இந்தியா முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech. மற்றும்  B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.55,000 , அதிகபட்ச கட்டணம் ரூ.1.15 லட்சம் என்றிருந்த நிலையில், குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பதற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900, அதிகபட்சமாக ரூ.1,40,900 என்று கட்டணம் நிர்ணயம்.M.E., M.Tech., M.Arch., படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,41,200, அதிகபட்சமாக ரூ.3,04,000 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்ச கட்டணம் – அதிகபட்ச கட்டணத்துக்குள் தங்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம் எனக் குறிப்பிட்டு கட்டணக் குழுவின் பரிந்துரை அறிக்கையை வெளியிட்டது AICTE.3 ஆண்டு MCA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500 ஆகவும், அதிகபட்சமாக ரூ.1,94,100 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், 2 ஆண்டு MBA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000, அதிகபட்சமாக ரூ.1,95,200 என்று கட்டணம் நிர்ணயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *