கோதுமை ஏற்றுமதி தடை குறித்து இந்தியா ஆலோசிக்க வேண்டும்  – ஐ.நா அமெரிக்க தூதர் 

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக உலக அளவில் பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகிறது. இதன் விளைவாக உக்ரைனிலிருந்து போதுமான அளவு கோதுமை ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உக்ரைனிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் நாடுகள் இந்தியாவிடமிருந்து கோதுமை வாங்க ஆர்வம் காட்டி வந்தது. இந்த விளைவாக கடந்த ஏப்ரலில் அதிக அளவு  கோதுமை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.

இதன் விளைவாக உள்நாட்டில் கோதுமை விலை அதிகரிக்க தொடங்கியது. இதனால் வரும் நாட்களில் உள்நாட்டில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.  இதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஏற்றுமதிக்கு தடை அமல் செய்யப்பட்டது.

இந்நிலையில்  ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட் பேசுகையில் ஏற்றுமதிக்கு தடை வேண்டாம் என பல்வேறு நாடுகளிடம் நாங்கள் சொல்லி வருகிறோம். 

இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதால் உலக அளவில் கோதுமை விலை உச்சத்தை தொட்டுள்ளது இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் தற்போது பேசியுள்ளார்.

இந்திய அரசு நிச்சயம் மறுபரிசீலனை செய்வார்கள் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார். கோதுமை உற்பத்தியில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *