மதரஸாக்களில் தேசிய கீதம் கட்டாயம் – உத்தரபிரதேச அரசு

madrasa photo

உத்தரபிரதேசத்தில் உள்ள மதரஸாக்களில் தேசிய கீதம் பாடுவதை அம்மாநில மதரஸா கல்வி கவுன்சில் கட்டாயமாக்கியது.

உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள மதரஸாக்களில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னர் தேசிய கீதம் பாடுவதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியது. இதற்கான உத்தரவினை உத்தரபிரதேச சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் டேனீஷ் ஆசாத் அன்சாரி பிறப்பித்தார். மதரஸாக்களில் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற முடிவை கடந்த மார்ச் 24-ம் தேதி உத்தரபிரதேச மதரஸா கல்வி வாரியம் முடிவு செய்தது. 

ரம்ஜான் பண்டிகையையொட்டி மார்ச் 30-ம் தேதி முதல் மே 11-ம் தேதி வரை மதரஸாக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. விடுமுறை முடிந்த நிலையில் நேற்று மதரஸாக்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மதரஸாக்களில் தேசிய கீதம் பாடுவதற்கான உத்தரவு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவு அங்கீகரிக்கப்பட்ட, அரசு நிதியுதவி பெறும் மற்றும் பெறாத மதரஸாக்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று, உத்தரப்பிரதேச மதரஸா வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு மதரஸாக்களில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்றி, தேசிய கீதம் பாடுவதை கட்டாயமாக்கியது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *