சிலிண்டர் விலை குறித்து கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி..!!
இந்தியாவின் தொடர்ந்து சிலிண்டர் விலை உயர்ந்து வரும் நிலையில் பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டரில் ஏழைகள், நடுத்தர மக்களின் நலன் மீது காங்கிரஸ் கட்சி மட்டும் தான் அக்கறை இருக்கிறது என்று சிலிண்டர் விலை உயர்வை ஒப்பிட்டு ட்விட்டரில் பாஜகவை விமர்சித்துள்ளார்.
மேலும் அந்த வகையில் 2014ல் காங்கிரஸ் ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.410 மானியமாகவும் ரூ.827 வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பாஜக ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.999 மானியம் பூஜ்ஜியம் என்ற அளவில் உள்ளது. காங்கிரஸ் கட்சி மட்டும் தான் ஏழை, நடுத்தர இந்தியக் குடும்பங்களில் நலனில் அக்கறை கொண்டுள்ளது என ட்வீட் செய்துள்ளார்.
இதுதான் காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா பேசுகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள் தங்களுக்குத் தேவையான அளவு சிலிண்டர் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.
2014ல் இருந்ததுபோல் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். கிட்டத்தட்ட 2.5 மடங்கு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது என குறிப்பிட்டார். இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 17 மாதங்களில் சமையல் எரிவாயு ரூ.307 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.