கேரள முதல்வர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை..

கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டில்  சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர்  சோதனை மேற்கொண்டனர். கேரளத்தில் உம்மன்சாண்டி முதல்வராக இருந்த காலகட்டத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சரிதா நாயர்  சோலார் பேனல் மோசடி வழக்கில் பலரை ஏமாற்றிய கோடிக் கணக்கான பணத்தை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டியின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உட்பட 6 பேர் தன்னை பலாத்காரம் செய்ததாக சரிதாநாயர் பரபரப்பு புகார் ஒன்றை முன்வைத்தார்.

இந்த பரபரப்பு சூழலில் இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயனிடம் சரிதா நாயர் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு இல்லத்தில் நேற்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டு  உள்ளனர்.

அங்கு திடீரென சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதால்  அந்த பகுதி சற்று நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனையின் போது கேரள முதல்வர் பினராயி விஜயன் தன் மனைவியுடன் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு இல்லத்தில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *