6 பிள்ளைகள் முன்னிலையில் 3 காதலிகளை கரம்பிடித்த நபர்!! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்..

மத்திய பிரதேசத்தில் பழங்குடியைச் சேர்ந்த ஒருவர் தனது 3 காதலிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஐராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நன்பூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சர்பஞ்மெளரியா. 45 வயதான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

ஆனால் அப்போது கடும் வறுமையால் தவித்து வந்த மெளரியாவால் திருமணம் செய்ய முடியாமல் போனது. இதையடுத்து அந்தப் பெண்ணை திருமணம் செய்யாமல் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அதே சமயத்தில் தொடர்ந்து வேறு 2 பெண்களுடனும் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண்களையும் வீட்டிற்கு அழைத்து வந்து திருமணம் செய்யாமல் அவர்களுடனும் வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே மெளரியாவுக்கும் 3 காதலிக்கும் தற்போது 6 குழந்தைகள் பிறந்துள்ளனர்.

இந்நிலையில் 3 பேரையும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த அவர் ஒரே நேரத்தில் ஒரே மேடையில் தனது 6 பிள்ளைகளின் முன்னிலையில் பழங்குடியினர் மரபுப்படி திருமணம் செய்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *