மக்களுக்காக காங்கிரஸை சேர்ந்தவர்கள் சிறை சென்றார்கள்… பிரியங்கா காந்தி பிரச்சாரம்..!

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களுக்காக காங்கிரஸை சேர்ந்த 19,000 பேர் சிறை சென்றார்கள் எனப் பேசியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இதனை தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது, நாங்கள் சத்தீஸ்கர் மாநிலத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். அதேபோல உத்தரப் பிரதேசத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம். மின்சார கட்டணங்களை பாதியாக குறைப்போம். ஆட்சிக்கு வந்தால் பெண்களின் நிலை உயர பாடுபடுவோம் என்றார்.

மேலும் பேசிய அவர், இந்த உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். மொத்த தொகுதிகளில் 40 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர். அவர்கள் வெற்றி பெறுவார்களா அல்லது தோல்வி அடைவார்களா என்பதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், அவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கிறது என்பதில் மகிழ்ச்சி என்றார்.

ஹத்ராஸ் பாலியல் வழக்கு குறித்து பேசிய அவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற என்னை அவர்களை பார்க்க விடாமல் காவலர்கள் திருப்பி அனுப்ப முயற்சித்தனர். இதுபோன்ற அநியாயங்கள் நடக்கும் போதெல்லாம் பாஜக எங்கே இருந்தது என்று விமர்சித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எந்த ஒரு உதவியும் அரசு சார்பில் செய்யப்படவில்லை என அந்த குடும்பத்தினர் கூறியதாக தெரிவித்தார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நான்காம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பரப்புரையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…