உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை வெளியேற்ற 3 ஏர் இந்தியா விமானங்கள் இயக்க முடிவு

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் மேகம் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் இருந்து இந்திய குடிமக்கள் வெளியே வர உதவும் வகையில் ஏர் இந்தியா விமான நிறுவனம்மூன்று விமானங்களை இயக்க உள்ளது

பதற்றம் நிறைந்திருக்கும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் கவலைகளைகளை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் உக்ரைன் இடையே மூன்று வந்தே பாரத் மிஷன் (VBM) விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்த விமானங்கள் இயக்கப்படும்.

“ஏர் இந்தியா இந்தியா-உக்ரைன் (Boryspil International Airport) இடையே 22 மற்றும் 26 பிப்ரவரி 2022இல் 3 விமானங்களை இயக்கும்” என்று ஏர் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் அறிவித்துள்ளது.

“ஏர் இந்தியா முன்பதிவு அலுவலகங்கள், இணையதளம், கால் சென்டர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் (sic) மூலம் பயணிகள் பயணச்சீட்டை முன்பதிவு செய்யலாம்” என்று அது மேலும் கூறியது.

தந்து அணுசக்தித் திறனைக் நினைவூட்டும் வகையில், மூலோபாய அணுசக்திப் படைகளின் பெரும் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான ரஷ்யாவின் முடிவினால், போர் அச்சங்கள் அதிகரிக்கும் சூழலில், இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…