பாஜக ஆட்சியில் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்… பிரதமர் மோடி பேச்சு..!

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் ஆட்சியில் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பாக உணர்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இன்று உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, முஸ்லிம் பெண்கள் பாஜகவின் ஆட்சியின் கீழ் பாதுகாப்பாக உணர்கிறார்கள். அவர்கள் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் தற்போது எந்த ஒரு அச்சமுமின்றி செல்கிறார்கள். அதற்கு காரணம் சட்டம் மற்றும் ஒழுங்கு மாநிலத்தில் சிறப்பாக இருப்பதே ஆகும். முன்னதாக எதிர்க் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது மாநிலத்தில் உள்ள முஸ்லிம் பெண்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் வழியில் அவர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார்கள். ஆனால் பாஜக ஆட்சியில் இதுபோல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்ததன் மூலம் இன்று பெண்கள் நிம்மதியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வர முடிகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், சமாஜ்வாதி கட்சி அடிக்கடி கூட்டணியை மாற்றுவது குறித்து விமர்சித்தார். ஒவ்வொரு தேர்தலுக்கும் சமாஜ்வாதி கட்சி தங்களது கூட்டணி கட்சிகளை மாற்றி வருகிறது இப்படி இருந்தால் எப்படி தேர்தலில் வெற்றி பெற முடியும் என விமர்சித்தார். இந்த சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய லோக் தளத்துடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி வைத்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது.

தற்போது உத்தரபிரதேசத்தில் 55 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதற்கான தேர்தல் முடிவுகள் வருகிற மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…