இளைஞர்களுக்கு ஒரு லட்சம் அரசு வேலை உருவாக்கப்படும்… பஞ்சாப் முதல்வர் பேட்டி..!

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் ஒரு லட்சம் அரசு வேலைகள் இளைஞர்களுக்காக உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சரண்சிங் இதனை தெரிவித்தார்.

இதுகுறித்து பிரச்சாரத்தின் போது முதல்வர் சரண் சிங் பேசியதாவது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் இளைஞர்களுக்காக ஒரு லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மாநிலத்தின் வளர்ச்சிக்கு கல்வி இன்றியமையாதது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது அதிக செலவு ஆகும் ஒன்றாக மாறிவிட்டது. இன்று சண்டிகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குடும்பங்களில் ஒவ்வொருவரும் கல்வி கற்க வேண்டும். அவர்களுக்கு கல்வியறிவை கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்றார். இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அவர் பதாவூர் தொகுதியிலிருந்து போட்டியிட உள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் முடிவுகள் வருகிற மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…