பாஜக ஆட்சியில் பஞ்சாபில் மதமாற்றம் நடக்காது…உள்துறை அமைச்சர் பிரச்சாரம்..!

பஞ்சாபில் வருகிற பிப்ரவரி 20 அன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று பஞ்சாபில் பிரச்சாரம் மேற்கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக ஆட்சியில் பஞ்சாபில் மதமாற்றம் நடக்காது என தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் உள்ள வால்மீகி கோவிலில் தரிசனம் செய்த உள்துறை அமைச்சர் இவ்வாறு கூறினார். அதன்பின் அவர் டெல்லியில் ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி கட்சியை தாக்கிப் பேசினார். ஆம் ஆத்மி சீக்கியர்களுக்கு ஒருபோதும் அரசியல் களத்தில் வாய்ப்பு அளித்த இல்லை. இரு முறை முழு பலத்துடன் டெல்லியில் ஆட்சி அமைத்தும் அவர்களது அமைச்சரவையில் ஒரு சீக்கியர் கூட இடம் பெறவில்லை. ஆனால், பாஜக ஒரு போதும் சீக்கியர்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்க தவறியதில்லை என்றார்.

அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 20 அன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் முடிவுகள் வருகிற மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…