இரு மாநில சட்டப்பேரவைகளுக்கு நாளை தேர்தல்..!

உத்தரப்பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை உத்தரகண்ட் மற்றும் கோவா ஆகிய இரு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கோவாவில் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்டமாக நாளை 55 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடந்தது.

இந்த தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…