பாஜக வெற்றி பெற்றால் இது கண்டிப்பாக நடக்கும்… உத்தரகண்ட் முதல்வர் பரப்புரை..!

இந்தியாவில் உத்தரகண்ட் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், உத்தராகண்ட்டில் பாரதிய ஜனதா மீண்டும் வெற்றி பெற்றால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

டேராடூனில் பரப்புரையின்போது பேசிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்டம் என்பது அனைத்து தரப்பு மக்களையும் ஒரே பார்வையுடன் அணுகும் என தெரிவித்தார். பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்து ஆராய குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

திருமணம், விவாகரத்து, நில உரிமை, சொத்துரிமை உள்ளிட்ட அம்சங்களில் அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சட்டதிட்டங்கள் பொது சிவில் சட்டத்தில் இடம் பெறும் எனவும் அவர் கூறினார். சட்ட நிபுணர்கள், அனைத்து தரப்பு பிரதிநிதிகள் கொண்டதாக இக்குழு இருக்கும் என முதலமைச்சர் தெரிவித்தார். தேசிய அளவில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பாஜக அரசு முயற்சிப்பதாக ஏற்கனவே தகவல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…