ராகுல் பஜாஜ் மறைவுக்கு குடியரசு தலைவர் இரங்கல்..!

பஜாஜ் குழும நிறுவனங்களின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் புனேவில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ராகுல் பஜாஜ் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பஜாஜ் ஆட்டோ வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ராகுல் பஜாஜ். கடந்த 2001 ஆம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி வியாபார தலைவர்களில் ராகுல் பஜாஜ் முக்கியத்துவம் வாயந்தவராக திகழ்ந்தார். கடந்த ஆண்டு இவர் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் இன்று பூனேவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

அவரது மறைவு குறித்து குடியசுத் தலைவர் தனது இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது, ராகுல் பஜாஜின் மறைவு அறிந்து வருந்துகிறேன். இந்தியத் தொழில்துறையின் அதிபரான அவர், அதன் முன்னுரிமைகளில் ஆர்வமாக இருந்தார். அவரது தொழில் வாழ்க்கை நாட்டின் பெருநிறுவனத் துறையின் எழுச்சியையும் உள்ளார்ந்த வலிமையையும் பிரதிபலித்தது. அவரது மரணம் தொழில் உலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

உடல்நலக் குறைவினால் இயற்கையை எழுதிய ராகுல் பஜாஜின் வயது 8+3 என்பது குறிபிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…