அவர்கள் அவர்களது குடும்பத்துக்காகவே வாழ்கிறார்கள்… யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு..!

இந்த ஆண்டு உத்தர பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல் உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று உத்தரபிரதேச மாநிலத்திற்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற பிப்ரவரி 14 அன்று நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் அதற்கான தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி போன்ற எதிர்க்கட்சிகள் தங்களது குடும்பங்களுக்காகவே வாழ்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஷாஜகான்பூர் பகுதியில் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் இரட்டை எஞ்சின் ஆட்சி முறை சிறப்பாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தங்களது குடும்ப நலனுக்காகவே செயல்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

அப்போது பேசிய அவர், நாம் தேசியம் பற்றி பேசினால் அவர்கள் ஜாதி குறித்து பேசுகின்றனர். நம் நாட்டின் வளர்ச்சி குறித்து பேசினால் அவர்கள் மதம் மற்றும் இடுகாடுகள் குறித்து பேசுகின்றனர். நாம் கன்னா (கரும்பு) குறித்துப் பேசினால் அவர்கள் ஜின்னா குறித்து பேசுகிறார்கள் என எதிர்க்கட்சியினர் குறித்து குற்றம் சாட்டினார்.

பாஜக அரசு இளைஞர்களின் நலனுக்காக அவர்களுக்கு ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட் போன்றவைகளை வழங்கியது. ஆனால், சமாஜ்வாதி கட்சி இந்தத் திட்டம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது. இதிலிருந்தே மக்களுக்கான நல்ல திட்டங்களை அவர்கள் செயல்படுத்த விடுவதில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

உத்தரபிரதேசத்தில் வருகிற பிப்ரவரி 14 அன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் வருகிற மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…