பெண்களுக்கு எதிரான வன்முறைகளை மக்கள் மறக்க மாட்டார்கள்… பிரியங்கா காந்தி பிரச்சாரம்..!

உத்தரப் பிரதேசத்தில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி என்று உத்தர பிரதேசத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், உத்திரப் பிரதேச மக்கள் மாநிலத்தில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆகியவற்றை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும். பாஜகவின் ஆட்சியில் மேற்கூறிய அனைத்து விஷயங்களும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்து வருகிறது என்றார். உத்திர பிரதேசத்தில் ராம்பூர் தொகுதியில் சாலை ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்று முதல் கட்ட தேர்தல் நடந்து முடியும் நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற பிப்ரவரி 14 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…