பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ளனர்… ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பேச்சு..!

இந்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் சிங் காங்கிரஸ் கட்சியின் மீது பஞ்சாப் மக்கள் அதிருப்தியில் உள்ளதாக தாக்கி பேசியுள்ளார்.

இன்று பஞ்சாபில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் இவ்வாறு பேசியுள்ளார். தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. காங்கிரஸ் ஆட்சியின் கீழ் பஞ்சாப் மக்கள் நொந்து போயுள்ளனர். அவர்கள் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் ஆர்வத்தில் உள்ளனர். ஏற்கனவே அவர்கள் தேர்ந்தெடுத்த அரசு 5 ஆண்டுகளாக அவர்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை என குற்றம் சாட்டினார். காங்கிரஸ் ஆட்சியிலும் சரி அவர்களுக்கு முந்தைய சிரோமணி அகாலிதளம் ஆட்சியின் போதும் சரி மக்கள் அதிருப்தியிலேயே இருந்துள்ளனர் என்றார்.

நான் விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களுடன் துணை நிற்கிறேன். ஆனால் தற்போது இருக்கும் காங்கிரஸ் மற்றும் முந்தைய சிரோமணி அகாலிதளம் அதனை செய்ய தவறிவிட்டது என குற்றம் சாட்டினார். பஞ்சாப் மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…