நவ்ஜோத் சிங் சித்து பொறுப்பில்லாதவர்… முன்னாள் பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு..!

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரிந்தேர் சிங் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி ஒரு அமைச்சராக இருக்க தகுதி உடையவர் ஆனால், அவருக்கு முதல்வர் பதவி என்பது ஏற்புடையது அல்ல. அதைப்போல அந்த கட்சியில் இருக்கும் நவ்ஜோத் சிங் சித்து பொறுப்பில்லாதவரென தாக்கிப் பேசியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சி குறித்து பேசிய அமரிந்தேர் சிங், ஆம் ஆத்மி தலைவர் டெல்லியில் கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும் என விமர்சித்தார். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் இந்த விமர்சனத்தை அவர் முன்வைத்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் முடிவுகள் வருகிற மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…