காதலர் தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை… எங்கு, எதற்காக தெரியுமா?

February 14 goa government announced public holiday

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வரும் 14ம் தேதி முதல் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்படும் என கோவா அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, உத்தர பிரதேச மாநிலத்தில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் முதற்கட்ட தேர்தல் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதியும், கடைசி மற்றும் 7-வது கட்ட தேர்தல் மார்ச் மாதம் 7 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலும், மார்ச் 3 ஆம் தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடைபெறவுள்ளது. உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் கோவாவில் சட்டசபை தேர்தலையொட்டி, வரும் 14 ஆம் தேதி பொது விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபை தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக, கோவாவில் வரும் 14 ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…