பாஜகவை வீழ்த்த முடியும்… மம்தா பானர்ஜி நம்பிக்கை..!

இந்தியாவில் உத்திரப் பிரதேசம் உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் என்பது இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதனையடுத்து, தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவை ஆதரித்து உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியை ஆதரித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பரப்புரை மேற்கொண்டார். லக்னோவில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதா கட்சி இந்தியாவிற்கு அபாய அறிகுறி என விமர்சித்தார். யோகி ஆதித்யநாத் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேவையற்ற குழப்பங்கள் மட்டுமே ஏற்படும் என்றும் அவரை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தான் உண்மையான துறவிகளை மதிப்பதாகவும் தேர்தல் நேரத்தில் துறவி வேடம் இடுபவர்களை அல்ல என்றும் மம்தா பானர்ஜி பேசினார். அகிலேஷ் யாதவை வெற்றிபெறச்செய்வதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவை பாதுகாக்க முடியும் என்றும் மம்தா தெரிவித்தார். இதே கூட்டத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பங்கேற்று பேசினார்.

உத்தரபிரதேசத்தில் வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி தேர்தல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் முடிவுகள் வருகிற மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…