நீங்க எல்லை மீறிட்டிங்க… நாடாளுமன்றத்தில் வெளுத்து வாங்கிய நரேந்திர மோடி..!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய நன்றி உரையின்போது எதிர்க்கட்சிகளை சரமாரியாக தாக்கி பேசியுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் எல்லை மீறி விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். கொரோனா பரவலின் போத

கொரோனா பரவலின் போது புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்புமாறு மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசுகள் தெரிவித்ததன் விளைவாகவே உத்திரபிரதேசத்தில் கொரோனாவின் வேகம் அதிகரித்தது என அவர் குற்றம் சாட்டினார். மகாராஷ்டிராவில் காங்கிரசும், டெல்லியில் ஆம் ஆத்மியும் புலம்பெயர் தொழிலாளர்களை இவ்வாறு அனுப்பியது வேதனைக்குரியது.

கொரோனா அதிகரிக்கும் போது மகாராஷ்டிர அரசு புலம்பெயர் தொழிலாளர்களை தொடர்வண்டியில் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அறிவித்தது. அதேபோல, டெல்லியில் ஆம் ஆத்மி அரசு புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல பேருந்து வசதி செய்து தரப்படும் என ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்தது. இது எந்த மாதிரியான அரசியல் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார். கொரோனா காலத்தில் அப்பாவி புலம்பெயர் தொழிலாளர்களை இப்படி அவசரமாக அவர்களது மாநிலங்களுக்கு அனுப்பி அவர்களின் வேதனையை எதிர்க்கட்சிகள் சம்பாதித்துள்ளனர். இது மிகப்பெரிய பாவம் என குறிப்பிட்டுள்ளார்.

நான் எதிர்க்கட்சியின் விமர்சனங்களை எதிர்க்கவில்லை. விமர்சனங்கள் இருந்தால்தான் ஜனநாயகம் நன்றாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால்,தற்போது எதிர்க்கட்சிகள் அர்த்தமற்ற விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவர்களின் இந்த என்னத்தை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…