இப்படிலாமா செய்யவாங்க!! கேரள மாநிலத்தில் நடந்த கொடூர செயல்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சிகிச்சைக்கு வந்த 8ம் வகுப்பு மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட மனநல டாக்டருக்கு, நீதிமன்றம் 6 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் கிரீஷ் (58). பிரபல மனநல டாக்டர். பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பள்ளி மாணவர்கள் உள்பட ஏராளமானோருக்கு சிகிச்சை அளித்து வந்தார். பல டிவி நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் ஒருவன் படிப்பில் கவனக் குறைவாக இருந்துள்ளார். இதையடுத்து ஆசிரியர்கள் மாணவனை மன நல மருத்துவரிடம் காண்பிக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் தங்களது மகனை டாக்டர் கிரீஷிடம் அழைத்து சென்றனர். அப்போது மாணவனை மட்டும் டாக்டர் அறைக்குள் அழைத்து சென்றார். அப்போது மாணவனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து மிரட்டி ஓரின சேர்க்கையிலும் ஈடுபட்டு வந்து உள்ளார்.

இதுகுறித்து யாரிடம் கூற கூடாது என்று மிரட்டி உள்ளார். இந்த நிலையில் மாணவனின் நடவடிகையில் மாற்றங்கள் ஏற்பட்டதை கண்டு பெற்றோர் அவனிடம் விசாரித்தனர். அப்போதுதான் டாக்டரின் நடவடிக்கைகள் வெளிவந்தது. இதையடுத்து பெற்றோர் திருவனந்தபுரம் போர்ட் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் டாக்டர் கிரீஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் அதிவிரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயகிருஷ்ணன், டாக்டர் கிரிசுக்கு 6 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

டாக்டர் கிரீஷ் மீது ஏற்கனவே சிகிச்சைக்கு வந்த ஒரு மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாகவும், திருமணமான ஒரு பெண்ணை பலாத்கார செய்ததாகவும் புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…