மக்களின் கோபம் பாஜகவை தோற்கடிக்கும்… அகிலேஷ் யாதவ் பேச்சு..!

உத்தரப்பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களின் கோபம் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசினை தோற்கடிக்கும் என்றார். மேலும், சமாஜ்வாதி கட்சி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 400 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் தெரிவித்தார்.

இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இதனால் மக்கள் பாஜகவிற்கு ஒரு போதும் வாக்களிக்க மாட்டார்கள். இந்தத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார். மீதமிருக்கும் மூன்று தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெறும் என தெரிவித்தார்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் மும்முரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10 முதல் தேர்தல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் முடிவுகள் வருகிற மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…