அவங்க ட்யூனுக்கு டான்ஸ் ஆடுற முதல்வர் வேட்பாளர தேடுறாங்க… சித்து காட்டம்..!

இந்த ஆண்டு பஞ்சாப் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் களம் பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளை சந்தித்து வருகிறது. அந்த வரிசையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தற்போது கூறியுள்ள விஷயம் பஞ்சாப் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் மேலிடத்தில் இருக்கும் தலைவர்கள் அவர்கள் போடும் ட்யூனுக்கு டான்ஸ் ஆடுகிற முதல்வர் வேட்பாளரை தேடுகிறார்கள் என நவ்ஜோத் சிங் சித்து இன்று தெரிவித்துள்ளார். அதனால் மக்கள் சிறந்த முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் காங்கிரஸ் சார்பில் அம்மாநிலத்தில் இன்னும் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படாமல் உள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்று வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று நவ்ஜோத் சிங் சித்து இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக, நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌர் சித்து யார் இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் என்னுடைய கணவர் எனக்கு ஹீரோ தான் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற பிப்ரவரி 20-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…