மாஃபியாக்களால் ஆட்சிக்கு வர முடியாது…பிரதமர் மோடி பேச்சு..!

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், உத்தரபிரதேசத்தில் ஒருபோதும் மாஃபியாக்களால் ஆட்சிக்கு வரமுடியாது என தெரிவித்தார்.

அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் பிரதமர் குற்றம் சாட்டினார். உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியின்போது வன்முறைகள் அதிகம் நிறைந்ததாக மாநிலம் இருந்தது. கலவரக்காரர்கள் அதிகமாக காணப்பட்டனர். இந்தத் தேர்தலில் அவர்கள் ஆட்சியைப் பிடிக்க முடியாது என அவர் தெரிவித்தார். மேலும், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான ஆட்சி உத்தரப் பிரதேசத்துக்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை கொண்டுவந்துள்ளது. பாஜக தலைமையிலான ஆட்சியில் மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. இந்த தேர்தல் சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெறும் தேர்தலில் மிகவும் முக்கியமானதாகும். இதற்கு முன்னதாக பல கட்சிகள் மாநிலத்தை ஆட்சி செய்து இருக்கலாம். ஆனால், தற்போது நடக்கவுள்ள தேர்தலில் தனித்துவமானது. இது மாநிலத்தின் வளர்ச்சி காண தேர்தல். இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இரட்டை எஞ்சின் ஆட்சியை மாநிலத்தில் நிலைநாட்டும் என்று அவர் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10 முதல் தேர்தல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் முடிவுகள் மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…