அரசாங்கம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறது… பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு..!

உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் அரசாங்கம் எதிர்க்கட்சிகளை விசாரணை நிறுவனங்களை பயன்படுத்தி அச்சுறுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.

இன்னும் சில தினங்களில் உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர், ஆளும் அரசு தனது அதிகாரத்தை எதிர்க்கட்சி மீது தவறாக பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முன்பு இல்லாத அளவிற்கு காங்கிரஸ் உத்தரப்பிரதேசத்தின் அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார். அண்மையில் அமலாக்கத் துறையினர் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்தனர். மேலும், கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் பிரியங்கா காந்தியின் இந்த குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது.

உத்தரபிரதேசத்தில் வருகிற பிப்ரவரி 10 முதல் தொடங்கி ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 10 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…