தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறிய அகிலேஷ் யாதவ்..!

இந்தியாவில் உத்தரப் பிரதேசம் உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கொரோனா விதிமுறைகளை மீறியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மேலும், அகிலேஷ் யாதவ் உடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் ஜெயந்த் சௌத்ரி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதேபோல தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்கள் ராஜ்குமார் பாட்டி, இந்திர பிரதான் போன்ற பலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த பின்னர் அனைத்து கட்சியினரும் கொரோனா விதிமுறைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளை பின்பற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபடவேண்டும் என வலியுறுத்தியது. ஆனால், இன்று உத்தரப்பிரதேசத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அந்தக் கட்சியைச் சேர்ந்த 300-400 பேர் கொரோனா விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்கள்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. மாநிலத்தில் தேர்தல் வருகிற பிப்ரவரி 10 அன்று தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் முடிவுகள் வருகிற மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…