ராமர் கோவில் கட்டுவதை தடுத்தவர்கள், கோவில் கோவிலாக செல்கிறார்கள்… பாஜக தேசிய தலைவர் விமர்சனம்..!

இந்த ஆண்டு உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் உட்பட ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ராமர் கோயில் கட்டுவது தொடர்பான விவகாரத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேசினார். அதில், ராமர் கோயிலை கட்டுவதை எதிர்த்த அரசியல் கட்சிகள் தற்போது கோயில் கோயிலாக சென்று வருவது வேடிக்கையாக உள்ளது என அவர் விமர்சித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். நாங்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக முயற்சி செய்தோம். அப்போது அதனை எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தினர். ஆனால், இன்று அவர்கள் கோயில் கோயிலாக சென்று வருகிறார்கள்.

தொடர்ந்து பேசிய அவர், உச்சநீதிமன்றத்தில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கு சென்று கொண்டிருக்கையில் காங்கிரஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால் தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பேசிய அவர், இன்று உத்திர பிரதேச மாநிலத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவதாக கூறும் எதிர்க்கட்சிகள் அவர்கள் ஆட்சியில் இருந்த போது அதனை செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

இன்னும் சில தினங்களில் உத்தர பிரதேச தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகின்றது. வருகிற பிப்ரவரி 10 அன்று தொடங்கி ஏழு கட்டங்களாக உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…