உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்… உள்துறை அமைச்சர் பேச்சு..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பேசியுள்ளார். உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை பாஜக கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்று கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர், இந்த தேர்தலில் பாஜக அரசு அமோக வெற்றி பெறும் என்றார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் அவர்களின் கூட்டணி உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் சிறப்பான ஆட்சியை அளிக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், இந்த கூட்டத்தில் அவர் பகுஜன் சமாஜ்வாதி கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றை தாக்கிப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், உத்தரபிரதேசத்தில் உள்ள மாபியாக்கள் அனைவரும் மூன்று இடங்களில் மட்டுமே உள்ளனர் என்றார். ஒன்று அவர்கள் உத்தர பிரதேச மாநிலத்திற்கு வெளியே இருக்கிறார்கள், மாநிலத்தில் இருக்கும் சிறைகளில் இருக்கிறார்கள் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்களாக இருக்கிறார்கள் என்றார். நாங்கள் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் மாபியாக்கள் இல்லாத இடமாக மாற்றுவோம் என்றோம். அதனை சொன்னதுபோலவே செய்துள்ளோம் என்றார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழலில் அரசியல் கட்சிகள் தங்களது தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். உத்திரபிரதேசத்தில் வருகிற பிப்ரவரி 10 முதல் தொடங்கி ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் வருகிற மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…