பாஜகவில் இருக்கவங்க 24 கேரட் தங்கம்… ராகுலுக்கு பதிலடி கொடுக்கும் கமலேஷ்..!

பாஜகவில் தலித் தலைவராக இருந்து வரும் கமலேஷ் பஸ்வான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவில் இருப்பவர்கள் அனைவரும் 24 கேரட் தங்கம் என குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் நிதிநிலை அறிக்கையும், பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, தலித் தலைவர் கமலேஷ் பஸ்வான் ஒரு சிறப்பான தலைவர். அவர் அருமையாக பேசினார்.ஆனால், அவர் தவறான கட்சியில் இருக்கிறார் என தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக இன்று கமலேஷ் பஸ்வான் பேசியதாவது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவருடைய கட்சியில் இருக்கும் குறைபாடுகளை பார்க்காமல் மற்ற கட்சியில் இருப்பவர்களை விமர்சித்து வருகிறார். பாஜகவில் இருக்கும் அனைவரும் 24 கேரட் தங்கம் என கமலேஷ் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தலித் தலைவர் கமலேஷ் பஸ்வான் காங்கிரஸ் கட்சியினை தாக்கிப் பேசி இருந்தார். காங்கிரஸ் வறுமையை போக்குவதாக வாசகங்களை மட்டுமே கூறியது. ஆனால், அதற்கான முயற்சிகளை ஒருபோதும் இருக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…