வெங்காயம், தக்காளி விலையை குறைக்க நரேந்திர மோடி பிரதமர் ஆகவில்லை – ஒன்றிய இணை அமைச்சர் கபில் பாட்டீல்

இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பெய்த கன மழையால் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த தொடர் மழையின் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அத்திவாசியா பொருட்களின் விலையெல்லாம் கடுமையாக 

உயர்ந்தது. குறிப்பாக காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்தது. தக்காளி ஒரு கிலோ 130 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த விலையேற்றத்தை குறித்து இன்று ஒன்றிய இணை அமைச்சர் கபில் பாட்டீல் விளக்கமளித்துள்ளார். அதன்படி “விலைவாசி உயர்வுக்கு பிரதமர் மோடியை மக்கள் குறை கூறுகின்றனர். மக்கள் மட்டனை ஒரு கிலோ 700 ரூபாய்க்கு வாங்குகின்றனர். பீட்ஸாவை 500 ரூபாய்க்கு வாங்குகின்றனர். ஆனால் வெங்காயம், தக்காளி 40 ரூபாய்க்கு விற்பனையானால் விலைவாசி உயர்ந்துவிட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு விலையை குறைக்க அவர் பிரதமர் ஆகவில்லை. விலை உயர்வுக்கான காரணத்தை புரிந்து கொண்டவர்கள் பிரதமரை குறை கூறமாட்டார்கள்.” என்று கூறியுள்ளார்.

இவரது இந்த பேச்சுக்கு கடும் விமர்சனம் கிளம்பியுள்ளது.மேலும் மட்டனையும், பீட்ஸாவையும் மக்கள் தினமும் வாங்கி சாப்பிடுவதில்லை. என்றோ ஒரு நாள் தான் வாங்கி சாப்பிடுகிறார்கள். காய்கறியும், பீட்ஸாவும் ஒன்றா என்று மக்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…