கர்நாடகாவில் மார்ச் மாதத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு..!

இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் வருகிற மார்ச் மாதம் 28 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்த தேர்வு அட்டவணையை தற்போது கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அட்டவணை கடந்த ஜனவரி 26-ம் தேதி முடிவு செய்யப்பட்டது. கொரோனா பரவல் காரணத்தினால் தேர்வுகள் உரிய நேரத்தில் நடைபெறுமா என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த பொதுத் தேர்வு ஏப்ரல் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தங்களை தேர்வுக்கு நன்றாக தயார் செய்து கொள்ள வேண்டும். தேர்வுக்கான கால அட்டவணையை மாணவர்கள் sslc.karnataka.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் நலன் கருதி கர்நாடக அரசு பயிற்சி வினாத்தாள் மற்றும் முந்தைய ஆண்டுகளுக்கான தேர்வு தாள்கள் ஆகிவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

பொதுத் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் எந்தவித அச்சமுமின்றி தேர்வினை எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக கர்நாடக அரசு முந்தைய ஆண்டுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் மாதிரித் தேர்வுகள் ஆகியவற்றை இணையத்தில் பதிவேற்றி உள்ளனர்.

தேர்வுக்கான கால அட்டவணை இன்று வெளியாகியுள்ள நிலையில் அவர்களுக்கு தேர்விற்கு தயாராக இன்னும் இரண்டு மாதங்கள் கால அவகாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…