அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பேன்… ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அதிரடி..!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பாக முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் பகவந்த் மான் தூரி தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பேன் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.

பஞ்சாபின் தூரி தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், கடந்த மக்களவைத் தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இந்த முறை பஞ்சாப் மாநில தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் சிரோமணி அகாலி தளம் இரட்டை இலக்க தொகுதிகளை கைப்பற்றுவது முடியாத காரியம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், சிரோமணி அகாலி தள வேட்பாளர் பர்கஷ் சிங் படலுக்கு எனது வாழ்த்துக்கள். இதோடு அவர் மூன்று முறை இந்த தேர்தல் தான் எனது கடைசி தேர்தல் என கூறி போட்டியிட்டு வருகிறார். அவரது கட்சி 25 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் எனக் கூறி இருக்கும் அவருக்கு அந்தக் கட்சி 25 தொகுதியில்கூட ஜெயிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 அன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…