டிஜிட்டல் மையமாகப்போகும் கல்வி… பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2022 – 2023ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் கல்விக்காக என்னென்ன மாதிரியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்பதை விரிவாக காணலாம்…

கற்றல் இடைவெளியை நிரப்பும் வகையில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஒரு வகுப்பு ஒரே தொலைக்காட்சி சேனல் (One Class One TV Channel) திட்டம் விரிவுபடுத்தப்படும். இப்போதைக்கு 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக 12 சேனல்கள் உள்ளன. இனி, இதற்காக 200 சேனல்கள் செயல்படும். 1-12-ம் வகுப்பு வரை மாநில மொழிக்கல்வி ஊக்குவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். உலகத் தரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை இந்தப் பல்கலைக்கழகம் உறுதி செய்யும். சர்வதேச தரத்திலான கல்வி அதே நேரத்தில் இந்தியத் தன்மையுடன் கிடைக்கும்.

அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் மொழித் தடை இல்லாமல் இதில் பயன்பெறலாம். அதற்காக பல்வேறு இந்திய மொழிகளிலும் பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்படும். இந்தியாவின் முதன்மையான பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்த பாடப்பிரிவுகளை மாணவர்களுக்கு வழங்கும்.

வேளாண் பல்கலைக்கழக பாடத்திட்டங்களை மேம்படுத்த மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும். புதிய பாடத்திட்டத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம், இயற்கை வேளாண்மை, நவீன வேளாண்மை நுட்பங்கள், மதிப்புக்கூட்டுதல் மற்றும் மேலாண்மை ஆகிய பிரிவுகள் சேர்க்கப்படும். வேளாண் பாடத்திட்டத்தை மேம்படுத்த ஏதுவாக ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும்.

கிராபிக்ஸ், அனிமேஷன் துறைகளை மேம்படுத்த, இந்தத் துறைகளின் செயல்பாடுகளை இன்னும் சிறப்பானதாக மாற்ற சிறப்பு பேனல்கள் அமைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…