சமாஜ்வாதி கட்சியின் தொப்பிகள் மக்களின் ரத்தத்தால் ஆனது… யோகி ஆதித்யநாத் பேச்சு..!

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் வருகிற பிப்ரவரி 10 முதல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்களின் தொப்பி மக்களின் ரத்தத்தால் ஆனது என விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேசம் ஆக்ராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ள வேட்பாளர்களின் பெயர்களைப் பாருங்கள். அவர்கள் அனைத்தும் குற்றவாளிகள். குற்றவாளிகளுக்கு சமாஜ்வாதி கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி ஆட்சியின் போது பல்வேறு அசம்பாவிதங்கள் மக்களுக்கு நிகழ்த்தப்பட்டதாக குற்றம் சாட்டினார். அவர்களுடைய தொப்பி ரத்தக் கறையால் நிறைந்துள்ளது. அவர்கள் அப்பாவி ராமர் பக்தர்களை சுட்டுக்கொன்றனர் என கூறப்பட்டுள்ளது என்றார்.

கடந்த தேர்தலின் போது தேர்தல் வாக்கு சாவடியில் பல்வேறு கலவரங்கள் ஏற்பட்டன. ஆனால், இந்த முறை அமைதியான சூழல் நிலவுகிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10 முதல் தேர்தல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் முடிவுகள் வருகிற மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…