இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலைக்கு 2014 பொருளாதாரக் கொள்கையே காரணம்… பிரியங்கா சதுர்வேதி குற்றச்சாட்டு..!

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு 2014 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட பொருளாதார கொள்கையை காரணம் என சிவசேனா கட்சி தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான பிரியங்கா சதுர்வேதி குற்றம் சாட்டியுள்ளார். இன்று 2021-22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனையடுத்து, மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி தனது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி கூறி இருப்பதாவது, நாங்கள் ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு செயல்படுத்த பட்ட பொருளாதார கொள்கையை விமர்சித்து வருகிறோம். அந்தக் கொள்கையால் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தடைபட்டுள்ளது. அதைப் போலவே, இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பொருளாதார அறிக்கையிலும் வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றை காணமுடிகிறது என்றார்.

முன்னதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். பின்னர் சிறிது நேரத்திலேயே மாநிலங்களவையிலும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

உளவுத்துறை செயலியான பெகாசஸ் மென்பொருளை இஸ்ரேலிடம் இருந்து இந்திய அரசு வாங்கியுள்ளதாக குற்றம் சாட்டி பிரியங்கா சதுர்வேதி பேசியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…