கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனிங்க –  பிரக்யா சிங் தாகூருக்கு கொரோனா தொற்று

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியது. இதனால் பல லட்சம் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா பெருந்தொற்றை தடுக்க உலகில் பல்வேறு நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் நிறைய பேர் வேலை வாய்ப்பை இழந்ததோடு, உணவின்றியும் தவித்து வந்தனர்.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. மேலும், அந்தந்த மாநிலத்தில் கொரோனா அதிகரிப்பதை பொறுத்து அவர்களே கட்டுப்பாடுகளை அறிவித்துக் கொள்ளலாம் எனவும் ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தின் பாஜக எம்.பி சாத்வி பிரக்யா சிங் தாகூருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளது.இவர் தான் கொரோனாவின் இரண்டாம் அலையின் போது தினமும் கோமியம் குடிப்பதால் கொரோனா  வராது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

அவரை தொடர்ந்து இந்தி நடிகை கஜோல்-க்கும்,இயக்குனர் இமயம் பாரதி ராஜாக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…